
3வது முறையாக காதலில் விழுந்த எமி ஜாக்சன்
பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பரை காதலித்தார். அவருடன் லிவிங் டு கெதராக வாழ்ந்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். திருமணத்துக்கு முன்பே ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார் எமி ஜாக்சன். அதன் பிறகு ஜார்ஜையும் பிரிந்தார் எமி.
இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட்டிக்கும் எமி ஜாக்சனும் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. இருவரும் ஜோடியாக திரியும் படங்களும் வெளியானது. தற்போது இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!