டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் படத்திற்கும் அதிகாலை காட்சி
மே 03, 2022
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் அதிகாலை 4 மணிக்கெல்லாம் பல தியேட்டர்களில் காட்சிகளை ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு 8 மணிக்கு மற்றொரு காட்சி, பின் வழக்கமான நான்கு காட்சிகள் நடைபெறும்.
இந்த வாரம் வெளியாகும் ஹாலிவுட் படமான "டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்" படத்திற்கும் அதிகாலை 4 மணி காட்சியை தியேட்டர்காரர்கள் திட்டமிட்டுள்ளார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் படங்கள் இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றவை. அதிலும் குறிப்பாக "அவெஞ்சர்ஸ்" கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.
"டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்" படத்திற்காக படம் வெளியாகும் மே 6ம் தேதியன்று அதிகாலை 4 மணி காட்சிகள் நடைபெற உள்ளது. அதற்கடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி காட்சிகள் முடிந்தால் அதிகாலை 4 மணி காட்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வாரம் வேறு எந்தப் பெரிய படமும் இல்லாத காரணத்தால் அந்த சிறப்புக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!