
இயக்கத்தை விட்டு நடிப்பு, நடனம் பக்கம் வந்த பிரபுதேவா
தற்போது தமிழில் ஐந்தாறு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மீண்டும் சில முக்கிய நடிகர்களுக்காக நடன இயக்குனர் பணியையும் செய்ய ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்தார். "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்திற்காக வடிவேலுவுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தார்.
அடுத்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்காக நடனம் அமைக்கிறார். மலையாள "லூசிபர்" தெலுங்கு ரீமேக்கிற்காக சிரஞ்சீவி நடனம் ஆட, அந்த நடனத்தை இயக்குகிறார் பிரபுதேவா. தற்போது தமிழில் பிரபுதேவா பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு இயக்கம் பக்கம் போக மாட்டார் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!