
மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து
கேரளாவில், பிரபல நடிகர் திலீப், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவருடைய முன்னாள் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளதாவது: நடிகை மஞ்சு வாரியரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். மஞ்சு வாரியரின் மேலாளர்கள் சிலரின் பெயரையும் நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் பதில் அளிக்கவில்லை. அதனால், என்னுடைய சந்தேகம் அதிகரித்துள்ளது. யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் மஞ்சு வாரியர் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!