
முன்பதிவிலேயே 20 கோடி வசூலித்த டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்
"ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்" படத்தின் முன்பதிவு தொகையை இப்படம் கடந்துவிட்டதாம். படம் வெளிவருவதற்குள் மேலும் சில கோடிகள் முனபதிவு மூலம் கிடைக்கலாம் என்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்குள் கூடுதலாக 10 கோடி வரை முன்பதிவு மூலம் கிடைத்துவிடுமாம். கடந்த வருடம் வெளியான "ஸ்பைர்மேன்" படத்திற்குப் பிறகு இந்த "டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்" படத்தை மார்வெல் பெரிய அளவில் வெளியிடுகிறது.
2016ல் வெளிவந்த "டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்" படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவருகிறது. சாம் ரைமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் ஆக பெனடிக்ட் கம்பர்பாட்ச் நடிக்கிறார். இப்படம் அமெரிக்காவில் மட்டும் முதல் வாரத்தில் 200 மில்லியன் யுஎஸ் டாலர் வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய ஒரு "எல்ஜிபிடி" கதாபாத்திரம் படத்தில் இருப்பதால் இப்படம் சவூதி அரேபியா, கத்தார், குவைத், எகிப்து ஆகிய நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலும் இப்படம் வெளியாவதில் அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!