
மே 6ம் தேதி அதிகப் படங்கள் ரிலீஸ்
வரும் மே 5ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் நடித்த "ஐங்கரன்" படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து மே 6ம் தேதி கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ள "கூகுள் குட்டப்பா", ஆர்கே சுரேஷ் நடித்துள்ள "விசித்திரன்", நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ள "உழைக்கும் கைகள்", மற்றும் "வாய்தா, துணிகரம்" ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இதுதவிர செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள "சாணி காயிதம்" மே 6ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஹாலிவுட் படமான "டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்" படமும் மே 6ம் தேதி வெளியாகிறது.
இத்தனை படங்கள் வருவதால் இதற்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படங்களுக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். மே 13ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!