
முத்தையா இயக்கும் கிராமிய படத்தில் நாயகனாகும் ஆர்யா
ஏப் 30, 2022
Advertisement
கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்துள்ள படம் விருமன். முத்தையா இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஆர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருக்கும் இந்த படமும் முத்தையாவின் வழக்கமான கிராமத்துக் கதைகளில் உருவாகப் போகிறது. ஏற்கனவே ஓரிரு படங்களில் கிராமியக் கதைகள் நடித்திருந்தபோதும் இந்த படத்தில் முழு கிராமத்து நாயகராக உருவெடுக்கப் போகிறார் ஆர்யா.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!