
ஹிந்தியை ஏற்கமாட்டோம், ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம் : மோகன்ஜி விளாசல்
இந்நிலையில் இயக்குனர் மோகன்ஜி கூறுகையில், ‛‛ஹிந்தியை ஏற்க மாட்டோம். ஆனால் ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம். ஹிந்தி படிக்க புடிக்காது. ஆனால் ஹிந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம். ஹிந்தி பேச பிடிக்காது. ஆனால் தமிழ் படங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்து லாபம் அடைவோம். தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் . இப்படிப் பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை. அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும். ஆதரவு தரலாம் என்று ஒரு அதிரடி கருத்து வெளியிட்டிருக்கிறார் மோகன்ஜி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!