
ஜூன் 10ம் தேதி வெளிவரும் 777 சார்லி
பரம்வாஹ் ஸ்டூடியோஸ் சார்பில் ஜி.எஸ் குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். கிரண்ராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 10ம் தேதி வெளிவருகிறது. தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் வெளியிடவுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் தயாராகி உள்ள பான் இந்தியா படம் இது. சார்லி எனும் நாய்க்குட்டி மற்றும் அதன் "நண்பனான" தர்மாவை சுற்றி சுழலும் கதை. ஏற்கெனவே நாயை மையாக கொண்டு ஓ மை டாக் என்ற படம் வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்ததாக இந்த படம் வெளிவருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!