
நயன்தாரா நயன்தாரா தான் : சமந்தா பாராட்டு
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நயன்தாரா பற்றி சில வார்த்தைகள் எனக் கேட்டதற்கு சமந்தா, “நயன்தாரா நயன்தாராதான், அவரைப் போல வேறு ஒருவர் கிடையாது. அவர் உண்மையானவர், மிகவும் விசுவாசமானவர், நான் சந்தித்தவர்களில் மிகவும் கடின உழைப்பாளி,” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, சமந்தா முதல் முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர். சமந்தா நடித்து அடுத்து "சாகுந்தலம்" திரைப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. "யசோதா" என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் தேவரகொன்டா ஜோடியாக மற்றொரு தெலுங்குப் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!