ரயில் பயணம் எனக்கு பிடிக்கும் : கமல்
ஏப் 29, 2022
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற ஜூன் 3ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த விக்ரம் படத்தின் விளம்பரம் ரயில்களில் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த வீடியோவை கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதோடு ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛‛ரயில் பயணம் எனக்கு பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபம் என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம் பிறை, மகாநதி, தேவர் மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தை தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியை தருகிறது"" என்று கமல்ஹாசன் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!