
ஷங்கர் மகள் திருமண வரவேற்பு தள்ளிவைப்பு
அப்போது கொரோனா தொற்று பரவல் இருந்த காரணத்தால் திருமணம் எளிமையாக நடந்தது. திருமண வரவேற்பு விழா கொரோனா பிரச்சினைக்கு பிறகு பிரமாணடமாக நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி மே 1ம் தேதி ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம வரவேற்பு விழா நடக்க இருந்தது. இதற்காக இயக்குனர் ஷங்கர் பத்திரிகை விநியோகித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் மருத்துவ காரணங்களுக்காக வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மற்றொரு தேதியில் வரவேற்பு நடக்கும் என தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!