
ரஜினிக்காக உருவான கதையில் நடிக்கும் விஜய்
இந்த நிலையில் இந்தப்படத்தின் கதை ரஜினிக்காக ஏற்கனவே லோகேஷ் கனகராஜால் எழுதப்பட்டது என்றும் அந்தக் கதையில் தான் சில மாற்றங்களை விஜய்க்காக செய்துள்ளார் என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் பட அறிவிப்பு வருவதற்கு முன்பே கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்க இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது ஞாபகம் இருக்கலாம்.
ஆனால் சில காரணங்களால் அந்த கூட்டணி அமைய வாய்ப்பு இல்லாமல் போனது. இந்தநிலையில் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட அந்த கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்துப் போனதால் லோகேஷ் கனகராஜுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!