
ரூ.2000 கோடி வசூலித்த இரண்டு தென்னிந்தியப் படங்கள்
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த "ஆர்ஆர்ஆர்" படம் இதுவரையிலும் 1100 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்த "கேஜிஎப் 2" படம் 11 நாட்களிலேயே 900 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் சேர்த்து 2000 கோடி வசூலித்துள்ளது.
கொரானோவின் மூன்று அலை தாக்கத்திற்குப் பிறகுதான் இந்தப் படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களின் வெற்றி இந்திய சினிமாவையே புரட்டிப் போட்டுவிட்டது. வழக்கமான கமர்ஷியல் மசாலாப் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் இனி எப்படி படமெடுக்க வேண்டும் என்பதை இந்த இரண்டுப் படங்களும் கத்துக் கொடுத்திருக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!