
புதிய கார் வாங்கிய ராஜமவுலி
ராஜமவுலி தற்போது புதிதாக ஒரு வால்வோர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். பல சினிமா பிரபலங்கள் சில பல கோடிகளுக்கு கார் வாங்குவார்கள். ஆனால், ராஜமவுலி வாங்கியுள்ள காரின் விலை 44 லட்சம் மட்டுமே. சிவப்பு நிறக் காரின் சாவியை அந்தக் கார் கம்பெனியின் அதிகாரி ஒருவர் ராஜமவுலிக்கு வழங்கியுள்ளார். இது பற்றிய தகவலை வால்வோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த "ஆர்ஆர்ஆர்" படம் ரூ.1100 கோடி வசூலைக் கடந்து, ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!