
டிரெண்டிங்கில் கலக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர்
டிரைலரின் ஆரம்பமே குஷி படத்தில் இடம்பெற்ற அணையப் போகும் ஒரு விளக்கை அணைய விடாமல் தடுக்க, விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா மூன்று பேருமே ஓடிவந்து தங்களது கைகளால் விளக்கு அணையாமல் தடுக்கிறார்கள். இப்படி தொடங்கும் இந்த டிரைலரில் நானும் ரவுடி தான் படத்தில், ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா? என்று நயன்தாரா பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளது. அதோடு ஹோம்லியாக நயன்தாராவும் அல்ட்ரா மாடர்னாக சமந்தாவும் நடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு ஜாலியான காதல் கதையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியிருப்பதை இந்த டிரைலர் வெளிப்படுகிறது. அதனால் ரசிகர்களிடம் இப்பட டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாகவே 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று, டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!