
ஒரு அமைச்சரின் காதல் கதை சினிமா ஆனது
இந்த படத்தை ஸ்ரீஅம்மன் கலை அறிவியில் கல்லூரி விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். தேவா இசை அமைத்துள்ளார். எல்.முத்துகுமாரசாமி இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் அரசியல்வாதிகள் பற்றி விதவிதமான படங்கள் வந்திருக்கிறது. இது ஒரு அமைச்சரின் தூய்மையான காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இது நிஜகதை அல்ல. ஆனால் சில நிஜ சம்பவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடியதாக இருக்கும். குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு "ஹி"சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏப்ரல் 29 அன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!