
விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் மோகன்
ஏப் 20, 2022
Advertisement
பீஸ்ட் படத்தையடுத்து வம்சி இயக்கும் தனது 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். தமிழ் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்க, அவரது அண்ணனாக ஒரு முன்னணி நடிகர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது விஜய்யின் அண்ணனாக நடிகர் மோகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1980- 90களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்த மோகன், தற்போது விஜய்ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!