
தனுஷ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன்
ஏப் 20, 2022
Advertisement
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் " நானே வருவேன் ". இந்த படத்தை தாணு தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது. தற்போது தனுஷ் தனது நேரடி தெலுங்கு படமான "வாத்தி "" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தனுஷிற்கு ஜோடியாக இப்படத்தில் பிரபல நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக புகைப்படத்துடன் தகவலை பகிர்ந்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!