
பான் இந்தியா படமாக உருவாகும் ஜூனியர் என்டிஆரின் 30வது படம்
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மூலமாக தெலுங்கு தவிர்த்து மற்ற மொழி ரசிகர்களுக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நன்கு அறிமுகமாகி விட்டார். இதைத்தொடர்ந்து அவர் நடிக்க உள்ள அவரது முப்பதாவது படம் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பதை அந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா தற்போது தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக பான் இந்தியா படத்திற்கான கதை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஜனதா கேரேஜ் என்கிற வெற்றிப்படத்தை ஜூனியர் என்டிஆர் கொடுத்தவர்தான் இந்த கொரட்டாலா சிவா என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!