
அம்மன் வேடத்தில் பிந்து மாதவி
இதுபற்றிய விபரம் வருமாறு: எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் நாகா. இந்த படத்தில் பிந்து மாதவியும், ரைசா வில்சனும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஶ்ரீகாந்த், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம் படங்களை இயக்கிய சார்லஸ் இயக்குகிறார்.
படம் பற்றி சார்லஸ் கூறியதாவது: நீதித் துறையால் நெருங்கக்கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, அநீதியின் மொத்த உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம், அவதாரமெடுத்து வந்து சம்ஹாரம் செய்து அழித்து ஒழிப்பதே படத்தின் கதை.
பிந்து மாதவி தீயவர்களை அழிக்கும் மானஸா தேவியாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தொல்லியல் ஆய்வாளராக நடிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் இருக்கும் நாகராஜா கோவில்கள் மற்றும் நாகநாத சுவாமி கோவில்களில் படமாக்கப்படுகிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!