
கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்
ஏப் 17, 2022
Advertisement
தற்போது தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படம் 2019 தெலுங்கில் வெளியான ஏஜன்ட் சாய் சீனிவச ஆத்ரெயஎன்ற படத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் சந்தானத்துடன் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் உள்பட பலர் நடிக்க மனோஜ் பீதா என்பவர் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் சந்தானம் கலந்து கொள்ளப் போகிறார். அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் ,விஜய், சிவகார்த்திகேயன் என்று பலரும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி வர, சந்தானமோ கன்னட படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
Tags
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!