
பீஸ்ட், கேஜிஎப் 2 படங்களைப் பார்த்தாரா ரஜினிகாந்த் ?
இதனிடையே, கன்னட மீடியாக்களில் "கேஜிஎப் 2" படத்தின் பிரத்யேகக் காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டுமல்ல படத்தைப் பார்த்து வியந்து போன ரஜினிகாந்த், இயக்குனரை நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதே போல "பீஸ்ட்" படத்தையும் ரஜினிகாந்த் பார்த்ததாகவும் ஆனால், படத்தைப் பார்த்து எந்த கமெண்ட்டும் சொல்லாமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. "பீஸ்ட்" படத்தை இயக்கிய நெல்சன் தான் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில கன்னட ஊடகங்கள் அதற்குள் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாரா என செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் "சலார்" படத்தை இயக்கி வருகிறார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!