
மத மாற்றம் செய்பவர்களுக்கு இந்த படம் பாடம் - ஹெச்.ராஜா
மக்களை திசை திருப்பி, உடல் குணமாகும், காது கேட்கும், நடக்க முடியும் என்று பொய் மத பிரச்சாரம் செய்யும் கும்பலை தோலுரித்து இந்த படம் காட்டுகிறது. இந்த படத்தை அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பார்த்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.வின் ஹெச்.ராஜா : ‛‛மத மாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த படம் நல்ல பாடம். இந்த படம் நடப்பதை அப்படியே சொல்லி உள்ளது. எதையும் மிகைப்படுத்தவில்லை. நடப்பதை சம்பவமாக, சரித்திரமாக சொல்லி உள்ளனர். இது டப்பிங் படம் போன்று தெரியவில்லை. தமிழகத்தில் ரவுடிசம் பெருகிவிட்டது. பீஸ்ட் படம் மக்களை போய் சேரவில்லை. நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டு அந்த படத்தை ஓட வைக்க முயற்சி செய்யாதீர்கள்"" என்றார்.
அர்ஜுன் சம்பத் பேசும்போது, ‛‛திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் திரை துறையை அவர்களே கையில் எடுத்துக் கொள்கின்றனர். கொஞ்சம் மற்றவர்களையும் சம்பாதிக்க விடுங்க"" என்றார்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!