உலக சாதனை படைத்த யஷ் ரசிகர்கள்
ஏப் 15, 2022
Advertisement
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் "கேஜிஎப்". இந்த படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் "கேஜிஎப்" படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி நேற்று இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனஎன பல மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு யஷின் ரசிகர்கள், உலக சாதனை புரிந்திருக்கின்றனர். அதாவது 25,650 சதுர அடியில் யஷின் மிகப்பெரிய போஸ்டரை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் யாஷ் அந்த போஸ்டர் வீடியோவை வெளியிட்டு "எனது ரசிகர்கள் குடும்பம் மிகவும் வலிமையானது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!