
அமெரிக்கா - டாப் 10 பட்டியலில் ரஜினிகாந்த், விஜய் மட்டுமே
அவருக்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருந்தாலும் அமெரிக்காவில் வெளியீட்ற்கு முதல் நாளில் நடத்தப்படும் பிரிமீயர் காட்சிகளுக்கான வரவேற்பில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் மட்டுமே அதிக சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள்.
இதுவரையில் அமெரிக்காவில் நடைபெற்ற முன்னணி நடிகர்களின் பிரிமீயர் காட்சிகளில் ரஜினிகாந்த் நடித்து 2016ல் வெளிவந்த "கபாலி" திரைப்படம் 19 லட்சம் யுஎஸ் டாலர் பிடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து தற்போது வெளிவந்துள்ள விஜய் நடித்த "பீஸ்ட்" படம் 6 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து 3, 4, 5, 6, 7, 8 ஆம் இடங்களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "2.0, பேட்ட, காலா, தர்பார், அண்ணாத்த, லிங்கா" ஆகிய படங்கள் உள்ளன. விஜய் நடித்த "மெர்சல்" 9வது இடத்திலும், "சர்க்கார்" 10வது இடத்திலும் உள்ளன. வேறு எந்த ஹீரோவின் படங்களும் இந்த டாப் 10ல் இடம் பிடிக்கவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!