
ரோஜாவை வாழ்த்திய குஷ்பூ
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தபோதே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்த ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக நியமித்த அமைச்சர்களில் ரோஜாவையும் ஒரு அமைச்சராக்கி இருக்கிறார். இதையடுத்து ரோஜாவுக்கு திரையுலகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. நடிகை குஷ்பூ ‛‛ஆந்திரப்பிரதேச அமைச்சராக பதவியேற்ற ரோஜா செல்வமணிக்கு வாழ்த்துக்கள்"" என்று பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!