
துல்கர் சல்மான் நடிப்பில் மும்மொழி படமாக உருவாகும் சீதா ராமம்
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பதால் லெப்டினன்ட் ராம் என்றே தற்காலிக டைட்டில் வைத்து அழைத்து வந்தார்கள்.. இந்தநிலையில் ராமநவமியை முன்னிட்டு இந்தப்படத்திற்கு சீதா ராமம் என டைட்டில் சூட்டப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சூப்பர் 60, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.. இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடித்து வருகிறார் என்கிற அதிகாரப்பூர்வமான செய்தியும் சமீபத்தில் வெளியானது

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!