
நேரடியாக டிவியில் வெளியாகும் ஜெய் படம்
ஏப் 11, 2022
Advertisement
வீரபாண்டியபுரம் படத்திற்கு பிறகு ஜெய் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி உள்ள படம் குற்றம் குற்றமே. இந்த படத்தில் திவ்யா துரைசாமி, பாரதிராஜா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படம் நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் பாணியிலான கதை. இதில் பாரதிராஜா முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!