
தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் கேப்டன் மில்லர்
மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‛ராக்கி" படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது. படத்தில் தனுஷூக்கு வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‛கேப்டன் மில்லர்" என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் 1930ல் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் கூறப்படுகிறது. இந்த படம் தனுஷிற்கு பான் இந்திய திரைப்படம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!