
பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவை நடிக்க வைத்தது ஏன்? - நெல்சன் பதில்
அவர் கூறுகையில் ‛‛பீஸ்ட் படத்திற்கான நாயகி தேடலில் ஈடுபட்டு வந்தபோது இதற்கு முன்பு விஜய்யுடன் எந்த படத்திலும் நடிக்காத நடிகையாக இருக்க வேண்டும் என்று பரிசீலனை செய்தோம். அப்படி பல நடிகைகள் எங்களது பட்டியலில் இடம் பெற்று வந்தபோது தெலுங்கில் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான அல வைகுந்தபுரம்லு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தில் பூஜா மிக சிறப்பாக நடித்திருந்தார். அதன் காரணமாகவே பீஸ்ட் படத்தில் நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்தோம் என்றார். பீஸ்ட் படத்தில் பூஜாவின் நடிப்பும் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!