
தென்னிந்திய ஹீரோக்களுக்கு நிலா வாழ்த்து
தற்போது தனது பெற்றோர் வைத்த பெயரான மீரா சோப்ரா என்ற பெயரையே சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார். அடிக்கடி பதிவுகளையும் பதிவிடுவார். இன்றைய பதிவில் பான்--இந்திய ஹீரோக்களாக வெற்றி பெற்றுள்ள தென்னிந்திய ஹீரோக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தென்னிந்திய நடிகர்கள் பான்-இந்தியா அங்கீகராம் பெறுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது திறமை, பணிவு, வேட்கை ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், யஷ் ஆகியோரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது” என அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அவரது லிஸ்ட்டில் ஜுனியர் என்டிஆரைக் குறிப்பிட மறந்துவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!