
முன்பதிவில் ஆர்ஆர்ஆர்ஐ முந்தும் கேஜிஎப் 2
அதற்கடுத்து அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடித்துள்ள "கேஜிஎப் சாப்டர் 2" படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான முன்பதிவு இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று வருடங்களில் மிகச் சிறப்பான முன்பதிவு இது என சொல்கிறார்கள். மேலும் "ஆர்ஆர்ஆர்" படம் முன்பதிவில் படைத்த சாதனையை சில மணி நேரங்களிலேயே "கேஜிஎப் 2" முறியடித்துவிட்டதாம்.
இதுவரையில் "பாகுபலி 2" படம் தான் முன்பதிவின் மூலமாக மட்டுமே 35 கோடி ரூபாய் வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை "ஆர்ஆர்ஆர்" படம் கூட முறியடிக்கவில்லை. "கேஜிஎப் 2" படத்தில் ஹிந்தி நடிகரான சஞ்சதய் தத், ஹிந்தி நடிகையான ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருப்பது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
"கேஜிஎப் 2" படத்தின் முதல் நாள் வசூல் மிக அதிகமாக இருக்கும் என பாலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!