
1923ல் நடந்த கொலை சம்பவம் 2022ல் சினிமா ஆனது
இந்த படம் 1923ல் நடந்த ஒரு மாடல் அழகியின் கொலையை கருவாக கொண்ட உண்மை கதையை தழுவிய படமாகும். இதுபற்றி இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: 1923ல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை அறிய உலகம் துடித்தது. அதுதான் இந்த படம்.
இந்த கொலை சம்பவத்தை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது இருந்தது. லீலா என்ற மாடல் அழகி கொல்லப்படுகிறார். அவரது ஆண் நண்பர்களில் 5 பேருக்கு அவர் இறந்தால் பலன் இருக்கிறது. அதில் கொலையாளி யார் என்பதை துப்பறியும் நிபுணர் விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதே படத்தின் திரைக்கதை. என்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!