
ஏப்.,21ல் ஓடிடியில் வெளியாகும் ஓ மை டாக்
இப்படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். அவருடன் அருண் விஜய், விஜயகுமார், வினய், மகிமா நம்பியார், உள்பட பலர் நடித்துள்ளனர். சரோவ் சண்முகம் இயக்கி உள்ளார். ஒரு நாய்க்கும் ஒரு சிறுவனுக்குமான உறவை சொல்லும் படம். முதலில் வருகிற 14ம் தேதி வெளியிடுவதாக இருந்தனர். அந்த நேரத்தில் பீஸ்ட் வெளியாவதால் ஒருவாரம் தள்ளி 21ம் தேதி வெளியிடுகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!