
20 கால்பந்தாட்ட வீரர்கள் நடிக்கும் படம்
தயாரிப்பாளர் பிரபுஜித்தே ஹீரோவாக நடிக்கிறார். இவர் சுட்டுப் பிடிக்க உத்தரவு, பேட்ட, ஜகமே தந்திரம், போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இதில் நாயகியாக நடித்துள்ள சக்தி மகேந்திரா பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர். முதன் முதலாக இதில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக், ஆதீ இராசன் போன்றோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் நாகராஜ் பாய் துரைலிங்கம் கூறியதாவது: இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது பயணத்தில் சந்திக்கும் அழகிய காதல் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான, சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தப் படம்.
அந்தப் பயணத்தில் பல்வேறு முடிச்சுகளும் திருப்பங்களும் இருக்கும். படமாகப் பார்க்கும் போது பார்வையாளர்களைக் கட்டிப் போடும்படி விறுவிறுப்பாக இருக்கும்" கால்பந்தாட்டத்தையும்அதன் அசல் தன்மையோடு ஊடுருவச் செய்து கலகலப்பான சுவாரசியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
1980களில் மாநில, தேசிய அளவில் பங்கெடுத்துப் புகழ்பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களைச் சுற்றி இந்தக் கதை சுழல்கிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!