
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்
இதையடுத்து தற்போது கமலின் விக்ரம், பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, சந்தோஷ் சிவனின் ஜாக் அன்ட் ஜில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் காளிதாஸ். அந்தவகையில் மலையாளம், தமிழ் என இருமொழிகளில் தயாராகி வரும் ‛ரஜினி" என்கிற படத்தில் நடித்துள்ளார் காளிதாஸ். தமிழில் இந்தப்படத்திற்கு ‛ரஜினி ரசிகன்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றபடி இந்தப்படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார் காளிதாஸ். வினில் சகாரியா வர்கீஸ் என்பவர் இயக்கியுள்ள இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!