
வினய் ராய் - விமலா ராமன் காதல் திருமணம்?
பாலசந்தர் இயக்கிய கடைசி படமான "பொய்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் விமலா ராமன். ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட மலையாளப் பெண். தொடர்ந்து தமிழில் "ராமன் தேடிய சீதை, இருட்டு" உள்ளிட்ட படங்களிலும், சில தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்தார்.
வினய், விமலா ஆகியோர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ஏற்கெனவே சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் சொல்கிறார்கள். விமலாவுடன் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை வினய் மேற்கொண்டுள்ளாராம். தற்போது கூட விமலாவுடன் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!