
பான்--இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் விஜய்
அடுத்து வரும் ஏப்ரல் 13ம் தேதி விஜய் நடித்துள்ள "பீஸ்ட்" தமிழ்ப் படமும், 14ம் தேதி வெளியாக உள்ள "கேஜிஎப் 2" கன்னடப் படமும் பான்--இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
"கேஜிஎப் 2" டிரைலர் கடந்த வாரம் 5 மொழிகளில் வெளியாகி 160 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. விஜய் நடித்துள்ள "பீஸ்ட்" படத்தின் தமிழ் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்து "பீஸ்ட்" ஹிந்தி டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியானது. தெலுங்கு டிரைலர் ஏப்ரல் 5 ம் தேதி வெளியாகிறது.
அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு "அரபிக்குத்து" பாடல் ஹிந்தி, தெலுங்கில் வெளியாக உள்ளது. இரண்டு மொழி டிரைலர்களும், பாடல்களும் சில பல மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யும் "பான்--இந்தியா" நடிகராக பிரபலமாவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!