
நயன்தாரா அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்
தனது வருங்கால மாமனார் குடும்பத்துடன் ஏற்கெனவே நெருங்கிப் பழகி வருபவர் விக்னேஷ் சிவன். தனி விமானத்தில் நயன்தாராவுடன் கேரளா சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர். நயன்தாராவின் அப்பா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்து தற்போது தேறியிருக்கிறார். அவருக்கு நேற்று பிறந்தநாள். தனது மாமனாருக்காக விக்னேஷ் சிவன் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அச்சன் குரியன். உங்கள் சிரிப்பைப் பார்ப்பது, நீங்கள் சாப்பிடுவதைப் பார்ப்பது, நீங்கள் எங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி. உங்கள் இருப்பு எங்களது வாழ்க்கையை அழகாக்கும். எங்களுடன் எப்போதும் என்றென்றும் உடனிருக்க கடவுகள் உங்களுக்கு வலிமையையும், சக்தியையும் கொடுக்கட்டும், லவ் யு அச்சு, நீங்கள்தான் எங்கள் ஆசீர்வாதம்,” என்று குறிப்பிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!