
மும்பையில் சொந்த வீடு வாங்கிய சமந்தா
மேலும், ஏற்கனவே ‛தி பேமிலி மேன்-2" வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார் சமந்தா. அதையடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பாலிவுட்டில் பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் அதிக படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வரும் சமந்தா, இதுவரை மும்பையில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தவர் தற்போது மும்பை கடற்கரை பகுதியில் மூன்று கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் ஹைதராபாத்தை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பையில் குடியேறி விடுவார் என்றும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!