
சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த அன்பு பரிசு
இந்தநிலையில், காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த போது சமந்தாவுக்கு ஒரு அழகிய கம்மல் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் நயன்தாரா. அந்த வாழ்த்து அட்டையில் அப்படத்தில் சமந்தாவின் கேரக்டரான கதீஜாவை குறிப்பிட்டு டியர் கதிஜா, வித் லவ் கண்மணி என தனது கேரக்டர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நயன்தாரா . இதற்கு நன்றி தெரிவித்து உள்ள சமந்தா அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!