
பரபரப்பான தியேட்டர் ஒப்பந்தங்களில் பீஸ்ட்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் "கேஜிஎப் 2" படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தங்களை எப்போதோ முடித்துவிட்டிருக்கிறார்கள். "பீஸ்ட்" படம் பற்றிய வெளியீட்டு முடிவை கடந்த மாதம் தான் முடிவு செய்தார்கள். இருப்பினும் எந்தத் தியேட்டர்கள் எல்லாம் கிடைக்கிறதோ அவை அனைத்திலும் படத்தை வெளியிட ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறார்களாம். இன்னும் ஓரிரு நாட்களில் இவை அனைத்தையும் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் "பீஸ்ட்" படத்திற்கு "கேஜிஎப் 2" படத்தை விடவும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, வட இந்தியா ஆகியவற்றில் "கேஜிஎப் 2" முந்திக் கொள்ளும் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!