
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற அஜித்?
இவற்றை கருத்தில் கொண்டும், 61வது படம் எந்த சிக்கலும் இன்றி நிறைவடைய வேண்டும், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனைவி ஷாலினியின் வேண்டுதல்படியும் அஜித் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்து படங்கள் இணையதளத்தில் வெளியானது.
ஆனால் இந்த வழிபாட்டுக்கு முன்னதாக அஜித் 15 நாட்கள் வரை பாலக்காடு பகுதியில் உள்ள பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் தங்கியிருந்து இயற்கை வைத்தியம் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெறுகிறவர்கள் கடைசி நாளில் கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!