குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய நடிகர் அஸ்வின் குமார் 2014 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் பல்வேறு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் வெளியானது . மேலும் "குட்டி பட்டாஸ்" மற்றும் அடிப்பொலி உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் குமார் நடிப்பில் அடுத்து " பேபி நீ சுகர் " எனும் புதிய ஆல்பம் பாடல் தயாராகியுள்ளது. இந்த பாடலில் அஸ்வினுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ளார். மாக்வென் இந்தப் பாடலை இயக்கியுள்ளார். ஓஷோ வெங்கட் பாடியுள்ளார். இந்த ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார் .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!