
‛நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும் - ஏப்., 2ல் பீஸ்ட் டிரைலர் வெளியீடு
அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் கலந்த படமாக உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் ராவில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளியாகும் என இயக்குனர் நெல்சனிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கு இன்று அப்டேட் வரும் என கூறியிருந்தார் நெல்சன். இந்நிலையில் அவர் சொன்னதுபடியே ஏப்., 2ல் மாலை 6மணிக்கு பீஸ்ட் பட டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதன் உடன் ‛‛நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்"" என பதிவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான போஸ்டரில் விஜய் போர் விமானத்தில் பறப்பது போன்று வெளியிட்டுள்ளனர். இவை எல்லாமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!