ஏப்., 14ல் மோகன் நடிக்கும் ஹரா படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
Advertisement
Advertisement
ஏப்., 14ல் மோகன் நடிக்கும் ஹரா படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
மார் 30, 2022
அ நிறம் | அளவு
Advertisement
1980- 90களில் சூப்பர் ஹிட் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்கு பின் அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கி நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விட்டதால் அதன் பிறகு மோகனை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்ஸ்ரீ இயக்கி வரும் ஹரா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மோகன். இந்த படம் தந்தை மகள் சென்டிமென்ட் கதையில் உருவாகிறது. இப்படத்தில் அவருடன் சாருஹாசன், குஷ்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது ஹரா படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!