ஏப்ரல் 6ல் விஜய் 66 படம் ஆரம்பம்?
மார் 30, 2022
Advertisement
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்துள்ள ‛பீஸ்ட்" திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் .
காமெடி கலந்த குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா, தமன்னா, க்ரீத்தி சானோன் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஏப்ரல் 6-ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!