
ஆஸ்கர் விருது பெற்ற மாற்றுத்திறனாளி நடிகர்: குவியும் பாராட்டுகள்
இவற்றுக்கு இடையில் இன்னொன்றும் நடந்தது. விழாவில் கோடா என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ட்ராய் கோட்சுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் வென்ற இரண்டாவது காது கேளாத நடிகர் இவர். இதே படத்தில் நடித்திருந்த மார்லீ மார்டின் தான் ஆஸ்கர் விருது பெற்ற முதல் காது கேளாத நடிகர். 1987ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் சில்ட்ரன் ஆப் லீசர் காட் படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.
உலகெங்கும் வாழும் காது கேளாத மனிதர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக ட்ராய் உருக்கமுடன் தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!