உலக பாக்ஸ் ஆபீஸ் ; நம்பர் 1 இடத்தில் ஆர்ஆர்ஆர்
மார் 29, 2022
Advertisement
ஒரு இந்தியத் திரைப்படம், உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தைப் பிடிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது தெலுங்குப் படமான "ஆர்ஆர்ஆர்".
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் கடந்த வாரம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. உலக அளவில் 21 பிரதேசங்களில் மட்டுமே வெளியான "ஆர்ஆர்ஆர்" படம் 6,32,09,000 யுஎஸ் டாலர்கள் வசூலித்து கடந்த வார இறுதி உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
77 பிரதேசங்களில் வெளியான ஹாலிவுட் படமான "தி பேட்மேன்" படம் 4,55,00,000 யுஎஸ் டாலர்கள் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்தை விட குறைவான பிரதேசங்களில் வெளியாக அதிக வசூலைப் பெற்று சாதனை புரிந்துள்ளது "ஆர்ஆர்ஆர்".
இந்திய சினிமாவிற்கு இது ஒரு பெருமையான சாதனை ஆகும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!